வேலூருக்கு என்று ஏழு அதிசயங்கள் உண்டு..
1. கடவுள் இல்லா கோவில் (சிலை திருடப்பட்டது
ஆனால் மீண்டும் புதிதாக வைக்கவில்லை)
2. தண்ணீரில்லா ஆறு (பாலாறு)
3. அதிகாரமில்லாத போலிஸ் (ஏன் என்று தெரியவில்லை)
4. அழகில்லாத பெண்கள்.
5. வீரமில்லாத ஆண்கள்
6. ராஜா இல்லாத கோட்டை
7. மரமில்லாத மலை (இதனால் தான் மிகுந்த வெப்பம்.
வேலூர் வெய்யிலுக்கு பிரசித்தி)
ஏழு சிறந்த பொய்கள்.
ReplyDeleteathe than.....
Deletepoints 4 and 5 stuck me !!!
it's very nice
ReplyDeleteidha yeludhunavanukku manda irundhurrukku aana moola illa
ReplyDeleteஇது காலம் காலமாக சொல்லப் பட்டு வரும் பொய். அழகு இல்லாத பெண்கள், கைக்கு கிடைக்காத மாங்காய் புளிக்கும் என்பது போல. வேலூரில் அதிகம் உள்ளவர் முதலியார் அடுத்தது முஸ்லிம்கள். உலகத்திலேயே அழகான பெண்கள் இந்த இரண்டிலும் உண்டு ஆனால் வேலூர் காரர்கள் முரண்கள் பணம் படைத்தவர் எனவே ஒரு காலத்தில் காதல் கத்திரிக்காய் உள்ளூரில் செல்லாது முடமாய் இருப்பதற்கு குருடனாக இருக்கலாம் என இளைஞர்கள். அதில் வெறித்தனமான பழைய கிழவன் கூறியதாக இருக்கும் இச்சொல்.
ReplyDeleteஆற்றின் ஓட்டம் இருவகை ஒன்று மணலுக்கு மேலே உபரிநீர் போல் இரண்டாவது ஆற்று படகை மணலுக்கு கீழ் ஓடுவது தெளிந்த சுவையான தண்ணீர் இன்றும் என்றும் தண்ணீர் கொடுப்பது சுவை அதிகம் அதனால் தான் கோக் நிறுவனம் பாலாற்றை சூறையாடுகிறது. இறை இல்லா கோயில், பூசாரி இல்லை என்றால் அது கோயில் இல்லை என கட்டியம் கூறப்பட்டது. பூசாரி இல்லாத போதும் மக்கள் எப்போதும் அக்கோயிலில் வலம் வந்தனர். தேர்வுகள் எழுத படிக்கவேண்டும் என்றால் மிக அமைதியும் குளுமையும் வேண்டும் அதை ஒருங்கே தந்தது அந்த கோயில் பிராகாரங்களும் மதில் சுவர்களும் தூண்களும். வழக்கத்திற்கு மாறாக அரசால் மிகவும் சுத்தமாக பராமரிக்க பட்ட இடம். காலையில் உதிக்கும் கிழக்கு சூரியனையும் மாலை அடுத்த பாதி கோளத்திற்கு விடியலை காட்ட விரையும் சூரியனை தொழுது வீட்டுக்கு செல்பவர்கள் தினம் நான் கண்டது, நானும் வீடு திரும்பி விடுவேன் படித்தது போதும் என்று. சேனைகள் இல்லா கோட்டை, அது உண்மை தான். இந்தியா முழுவதும் கோட்டைகள் உண்டு ராஜாக்களை தான் காணோம். பாவம் வாள் வீச்சு வீரர்களை கோழைகளாய் இரவில் தாக்குவதை வாடிக்காய் கொண்ட வெள்ளையரை என்ன தான் செய்ய முடியும், இன்றும் அவர்கள் போர் இரவில் தான் கோட்டானுக்கு பிறந்தவர்கள். மரம் இல்லாத மலையா, பாவம் பயந்தவர்கள் எழுதியது. என் பள்ளிப் பருவத்தில் ஐம்பது முறைக்கு மேல் சென்று இருக்கிறேன். செடிகளும் புதருகளும் ஏராளம் உச்சியில் பச்சை பசேலேன சிறு காடு அடர்ந்து இருக்கும். சாராயம் காய்ச்சும் கபோதிகள் ஏராளம் அவர்கள் தொல்லையால் மக்கள் கார்த்திகை தீபம் ஏற்ற மட்டும் செல்வார்கள். மலைப் பூங்காவனமாக இருக்க வேண்டிய மலைகளை சாராயக் காரர்கள் பூதமாக காட்டி விட்டனர். வேலூர் கோட்டைக்குள் இருந்து பல வழிகள் இந்த மலைக்கு உண்டு, ஏன் எல்லா மலைகளுக்கும் உண்டு. அவைகளை பராமரிக்காமல் அழித்து விட்டனர் கேடு கெட்ட வெள்ளையர். அடுத்து அதிகாரமற்ற போலீஸ், நல்ல நகைச்சுவை. வேலூர் தண்ணீர் குடித்தவன் எவனும் பேடி ஆவதில்லை. அப்படி அதிகாரமற்ற கோழைகளாய் இருந்தால் அவர்களுக்கு பயிற்சி பள்ளியாய் வேலூர் எப்படி இருக்க முடியும் அல்லது இந்த ராணுவத்திற்கு அன்று முதல் இன்று வரை அதிகமான வீரர்களை தரும் ஊராக எப்படி வேலூர் இருக்க முடியும். ஐம்பது ஆண்டுகளுக்கு முன் எந்த வீட்டுக்கு சென்றாலும் அங்கே மிலிட்டரியில் பணி புரியும் வீரப் புகைப்படங்கள் இருக்கும் அல்லது அந்த படங்களுக்கு பதக்கங்களுடன் மரியாதை மாலையும் இருக்கும். வீரம் நிறைந்த மண்ணில் அதிகாரமில்லாத போலீசுக்கு என்ன வேலை. வேலூரின் மாண்பை காப்பீர்
https://rajuwilk.wordpress.com/2019/10/31/seven-wonders-of-vellore-and-the-bushes-of-bagayam/
ReplyDelete