Pages

Saturday, October 23, 2010

Mayakkama Kalakkama (மயக்கமா கலக்கமா) - Lyrics


படம் : சுமைதாங்கி
பாடல் : மயக்கமா கலக்கமா
பாடியவர்: P.B. சீனிவாஸ்




மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எது வந்தாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும் (மயக்கமா)

ஏழை மனதை மாளிகையக்கி
இரவும் பகலும் காவியம் பாடி
நாளைப் பொழுதை இறைவனுக்களித்து
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு (மயக்கமா)

No comments:

Post a Comment

Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!