Pages

Tuesday, October 26, 2010

Oruvar Meethu(ஒருவர் மீது ஒருவர்) - Lyrics

படம் : நினைத்ததை முடிப்பவன்
பாடல் : ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து
இசை : M.S. விஸ்வநாதன்
பாடியவர்: T.M. சௌந்தராஜன், P. சுஷீலா
வரிகள் : புலமைப்பித்தன்

ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து
ஓடம் போலே ஆடலாம் ஆடலாம் (ஒருவர் மீது )
ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு
பாடல் நூறு பாடலாம் பாடலாம் (ஒருவர் சொல்ல )

சொட்டுத் தேனைப்போல் சொல்லும் வார்த்தைகள்
பட்டுப்பூவைப்போல் பார்க்கும் பார்வைகள்
சொர்க்கம் தேடிச் செல்லட்டும் ஆசை எண்ணங்கள்
அங்கெல்லாம் பொங்கட்டும் காதல் வெள்ளங்கள்(ஒருவர் மீது )

சொல்லித் தாருங்கள் ...பள்ளிப் பாடங்கள்
இன்னும் என்னென்ன மன்னன் லீலைகள்
தங்கப் பாவை அங்கங்கள் உங்கள் சொந்தங்கள்
தத்தை போல் மெத்தை மேல் ஏந்திக் கொள்ளுங்கள்(ஒருவர் சொல்ல)

கட்டுக்காவல்கள் விட்டுச் செல்லட்டும்
கன்னிப் பெண் என்னை பின்னிக் கொள்ளட்டும்
மையல் பாதி என்னோடு மீதம் உன்னோடு
மஞ்சத்தில் கொஞ்சத்தான் போதை கொண்டாடு

ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து
ஓடம் போலே ஆடலாம் ஆடலாம்...

9 comments:

Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!