Pages

Friday, October 22, 2010

Aval Paranthu Ponale (அவள் பறந்து போனாளே) - Lyrics


திரைப்படம் : பார் மகளே பார்
பாடல் : அவள் பறந்து போனாளே
பாடகர்கள் : T.M. சௌந்தராஜன் , P.B. ஸ்ரீனிவாஸ்
வரிகள் : கண்ணதாசன்



அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்கள இரெண்டைக் கவர்ந்து போனாளே (அவள் பறந்து)

என் காதுக்கு மொழியில்லை
என் நாவுக்கு சுவையில்லை
என் நெஞ்சுக்கு நினைவில்லை
என் நிழலுக்கு உறக்கமில்லை
என் நிழலுக்கு உறக்கமில்லை

இந்த வீட்டுக்கு விளக்கில்லை
சொந்தக் கூட்டுக்கு குயிலில்லை
என் அன்புக்கு மகளiல்லை
ஒரு ஆறுதல் மொழியில்லை
ஒரு ஆறுதல் மொழியில்லை

அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்கள இரெண்டைக் கவர்ந்து போனாளே

என் இதயத்தில் பூட்டிவைத்தேன்
அதில் என்னையே காவல் வைத்தேன்
அவள் கதவை உடைத்தாளே
தன் சிறகை விரித்தாளே

அவள் எனக்கா மகளானாள்
நான் அவளுக்கு மகனானேன்
என் உரிமைத் தாயல்லவா
என் உயிரை எடுத்துச் சென்றாள்
என் உயிரை எடுத்துச் சென்றாள்

அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்களiரெண்டைக் கவர்ந்து போனாளே!

No comments:

Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!